உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடலில் மூழ்கிய வாலிபர்: தேடும் பணி தீவிரம்

கடலில் மூழ்கிய வாலிபர்: தேடும் பணி தீவிரம்

திருப்போரூர்,கோவளம் கடலில் மூழ்கிய வாலிபரை, தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 26. இவர், ஒரகடம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தன் நண்பர்கள் ஏழு பேருடன் கோவளம் வந்துள்ளார். பின், அனைவரும் கோவளம் பகுதி கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, சசி குமார் மாயமாகி உள்ளார். நண்பர்கள் அளித்த தகவலின்படி கேளம்பாக்கம் போலீசார்,கோவளம் தீயணைப்பு வீரர்கள் வந்து, கடலில் மூழ்கிய சசிகுமாரை தேடினர். ஆனால், அவரை மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !