உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.50 லட்சம் நிலமோசடி 2 பேர் கைது

ரூ.50 லட்சம் நிலமோசடி 2 பேர் கைது

ஆவடி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் தெய்வ ஜோதி, 67. இவர், கடந்த மே 4ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்ததாவது:அம்பத்துார் அடுத்த புத்தகரம் கிராமத்தில், எனக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,580 சதுர அடி நிலம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த இடத்தை வில்லங்கம் போட்டு பார்த்தபோது, என் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, போலியான கையெழுத்து போட்டு, ஏழுமலை என்பவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.எனவே, என் நிலத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த மாதவரம், பொன்னியம்மன் மேடைச் சேர்ந்த ஆல்டிரின், 35, மற்றும் கோபி, 38,ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை