உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமிக்கு பாலியல் தொந்தரவு காமுகனுக்கு 20 ஆண்டு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு காமுகனுக்கு 20 ஆண்டு

சென்னை, வண்ணாரப்பேட்டை அருகே, 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி ஆறுமுக பிள்ளை,57.இவர், கடந்தாண்டு ஏப்., 26ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்தார்.இதுகுறித்து சிறுமியின் உறவினர் அளித்த புகாரின்படி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமமூர்த்தி ஆறுமுக பிள்ளையை கைது செய்தனர்.இந்த வழக்கை, நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி,'குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், ராமமூர்த்தி ஆறுமுக பிள்ளைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்