உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு

341 மதுபாட்டில் பறிமுதல் மூவருக்கு வலைவீச்சு

தேனாம்பேட்டை, வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 341 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, மூவரை தேடி வருகின்றனர்.தி.நகர், தெற்கு போக் சாலையில் உள்ள வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் விற்பதாக, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் நுழைந்து சோதித்த போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்காக, 341 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கில் தொடர்புடைய நிசாந்தினி, சத்யராஜ், மகேஷ்வரி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ