உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 4 பேர் கைது

மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை, எழும்பூர், ஈ.வெ.ரா., மணியம்மை சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே, எழும்பூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெண் உட்பட இருவர், சட்டவிரோதமாகவும், கூடுதல் விலைக்கும் மது பாட்டில்களை விற்றது தெரியவந்தது. எழும்பூர் காந்தி இர்வின் சாலையைச் சேர்ந்த சினேகா, 24, மணிமாறன், 29, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அதேபோல், மதுபாட்டில் விற்பனை செய்து வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தசரதன், 24, ராமசாமி, 62, ஆகிய இருவரையும், ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் 38 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ