உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வக்கீல் வீட்டில் 40 சவரன் திருட்டு

வக்கீல் வீட்டில் 40 சவரன் திருட்டு

திருவொற்றியூர், திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார், 39. இவரது மனைவி செண்பகஸ்ரீ, 35. இருவரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்.நேற்று மாலை மார்க்கெட் சென்ற தம்பதி, 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள், 50,000 ரூபாய் திருட்டு போயிருந்தன. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், நேற்று மதியம், மர்ம நபர் ஒருவர் அப்பகுதியில் சுற்றி திரிந்தது பதிவாகி உள்ளது.திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ