உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குட்கா கடத்திய 6 பேர் கைது

குட்கா கடத்திய 6 பேர் கைது

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தாலுகா போலீசார், பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, 'போர்டு பிகோ' காரை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில், 177 கிலோ போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக, ஆந்திராவில் இருந்து போதை வஸ்துக்கள் கடத்திய திருவள்ளூரைச் சேர்ந்த சட்டாராம், 35, தயாராம், 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடி வழியே வந்த இரண்டு பைக்குகளை போலீசார் சோதனை செய்தனர்.அதில், 41 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் சிக்கின. அம்பத்துாரைச் சேர்ந்த வேழவேந்தன், 53, வெங்கடசுப்புலு, 48, பரமசிவம், 62, மேகலா, 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை