உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொசு உற்பத்தி அமோகம் ரூ.6 லட்சம் அபராதம்

கொசு உற்பத்தி அமோகம் ரூ.6 லட்சம் அபராதம்

அடையாறு, அடையாறு மண்டலம், 171வது வார்டு எம்.ஆர்.சி., நகரில், ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான வளாகத்தில், டெங்கு பரப்பும் கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தது.மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள், இரண்டு மாதங்களுக்கு முன், எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கினர். இருந்தும் தடுப்பு நடவடிக்கை எடுக்காததால், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று இந்த இடத்தை சோதனை செய்த போது, 'ஏடிஸ்' கொசுப்புழுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இருந்தன. இதையடுத்து, கட்டுமான நிறுவனத்திற்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

அயனம்பாக்கம்

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் தனியார் குடியிருப்பு ஒன்றில், திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு, பயனற்ற டயர்கள், பீப்பாய்களில் இருந்த நன்னீரில், 'ஏடிஸ்' லார்வா புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் தனியார் குடியிருப்பிற்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை