முன்பகையால் ரவுடிக்கு வெட்டு தாய், மகன் உட்பட 6 பேர் கைது
டி.பி.சத்திரம், டி.பி.சத்திரம் 11வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அஜித் என்கிற ஜெயகாந்தன், 25. இவர் மீது, டி.பி.சத்திரம் போலீசில் பல்வேறு வழக்குள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே மது போதையில் அஜித் நின்று கொண்டிருந்தார்.அங்கு வந்த நான்கு பேர் கும்பல், 'நீ தான் போலீசுக்கு ஆள்காட்டியா' எனக் கேட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆஜித்தின் இடது பக்க தலையில் வெட்டி தப்பினர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்தனர்.இதில் தெரிய வந்ததாவது:கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த லுார்துமேரி, 40, என்பவர், கஞ்சா விற்று வந்ததாகவும், அஜித் போலீசாருக்கு தகவல் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, லுார்துமேரியின் 14 வயது மகன், அஜித்தை பழிவாங்கும் நோக்கில், ரவுடியாக வலம் வரும் குள்ள அருண் மற்றும் அவரது நண்பர்களை வைத்து வெட்டியது தெரியவந்தது.இந்த வழக்கில் தொடர்புடைய லுார்துமேரி, அவரது 14 வயது மகன், ரவுடி குள்ள அருண், 27, ஓம்பிகாஷ், 18, மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்களான கமலேஷ், 18, பிரேம்குமார், 19, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.