உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரோம்பேட்டையில் 75 நவீன கேமராக்கள்

குரோம்பேட்டையில் 75 நவீன கேமராக்கள்

குரோம்பேட்டை, குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., மற்றும் சி.எல்.சி., சாலைகளில், 75 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.ஜி.எஸ்.டி., சாலையில், காசநோய் மருத்துவமனை, மாநகராட்சி மண்டல அலுவலகம், வைஷ்ணவா ரயில்வே கேட் சந்திப்பு உள்ளிட்ட ஐந்து இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.ஏ.என்.பி.ஆர்., வகை கேமராக்களான இவை, வாகனங்களின் பதிவு எண், தகடு அங்கீகாரம் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடிக்கும். படம் பிடிக்கும் காட்சிகள் 20 நாட்கள் வரை சேமிக்க முடியும்.இந்த கேமராக்களை, காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்க வசதியாக, இரு மானிட்டர்கள் உள்ளன. இந்த கேமராக்கள், குரோம்பேட்டையில் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ளதால், அங்கு நடக்கும் விபத்து, குற்றங்களில் ஈடுபடுவோரை உடனுக்குடன் கண்டறிய முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ