வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாத்துலேயும் உசாரா இருப்பேன்னு ஒருத்தர் பேசிக்கிட்டு திரியறாரு.
பெரம்பூர்: சென்னை, மூலக்கொத்தளத்தைச் சேர்ந்தவர் லோகேஷ், 23; தனியார் நிறுவன ஊழியர். இவர், பணி முடிந்து, புறநகர் ரயிலில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார்.இதற்காக, கொரட்டூர் ரயில் நிலையத்தில் இறங்கி, வில்லிவாக்கம் நோக்கி நடந்து சென்றார். அப்போது, லோகேஷை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழி மறித்து பணம் கேட்டுள்ளனர்.அவர் மறுக்கவே, அவரை தாக்கி காலில் வெட்டினர். பின், லோகேஷின் மொபைல் போனில் இருந்து பணப்பரிவர்த்தனை செயலியான 'ஜிபே' வாயிலாக 87,000 ரூபாயை, தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றினர். மேலும், மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.இது குறித்து, அப்பகுதியினரின் உதவியுடன் காவல் கட்டுப்பாட்டறைக்கு லோகேஷ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லோகேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரது கால் தொடை பகுதியில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர். அண்ணா நகரில் போன் பறிப்பு
அண்ணா நகர், சாந்தி காலனி, ஏ.டி., பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், 69; ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர். இவர், நேற்று முன்தினம் மாலை, அண்ணா நகர் 5வது அவென்யூ சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் மூவர், சூர்யபிரகாஷின் கையில் இருந்த விலை உயர்ந்த மொபைல் போனை பறித்து தப்பினர். அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
எல்லாத்துலேயும் உசாரா இருப்பேன்னு ஒருத்தர் பேசிக்கிட்டு திரியறாரு.