உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அபாயகர அப்பார்ட்மென்ட் மறுகட்டுமானம் சி.எம்.டி.ஏ.,விடம் சலுகை கோரும் நிறுவனம்

அபாயகர அப்பார்ட்மென்ட் மறுகட்டுமானம் சி.எம்.டி.ஏ.,விடம் சலுகை கோரும் நிறுவனம்

சென்னை:சாலிகிராமத்தில், 'ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர்' என்ற பெயரில், 17 மாடி குடியிருப்பு கட்டடம் 2011ல் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் மக்கள் குடியேறிய நிலையில், மேல்தளம், துாண்களில் உடைப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.மொத்தம், 608 வீடுகள் உள்ள இந்த கட்டடம், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில், மக்கள் வாழும் நிலைமை ஏற்பட்டது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைத்த உயர் நிலை குழு அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில், கட்டடத்தை இடித்து புதிதாக கட்டி கொடுக்க கட்டுமான நிறுவனம் ஒப்புதல் தெரிவித்தது. இது தொடர்பாக, கட்டுமான நிறுவனம் - வீட்டு உரிமையாளர்கள் சங்கம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.முதற்கட்டமாக, கட்டடத்தை இடித்துவிட்டு மறு கட்டுமானம் மேற்கொள்ள, வரைபட அனுமதி கோரி சி.எம்.டி.ஏ.,விடம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.இது போன்று மறுகட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் நிலையில், விண்ணப்ப கட்டணங்களில் சில சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம்.சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனமும், வளர்ச்சி கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம், உறைவிட கட்டணம் ஆகியவற்றிலும் சலுகை வேண்டும் என கோரியுள்ளது. பிரீமியம் தளபரப்பு குறியீடு தொடர்பாக, 2022ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில், இந்த சலுகைகள் வழங்கப்படுமா என்பது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி