உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயின்ட் கடையில் தீ பல லட்ச மதிப்பில் நாசம்

பெயின்ட் கடையில் தீ பல லட்ச மதிப்பில் நாசம்

மாதவரம், மாதவரம் பேருந்து நிலையம் எதிரே, மனோஜ்குமார் என்பவருக்கு சொந்தமான எம்.ஏ.டிரேடர்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு கீழ் தளத்தில் 'பெயின்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ்' விற்பனையகமும், மேல் தளத்தில் குடோனும் செயல்பட்டு வருகின்றன. இங்கு 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி சென்ற நிலையில், நேற்று காலை 7:00 மணியளவில் கிடங்கில் இருந்து புகை கிளம்பியது. கடையின் அருகே இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு மாதவரம், வியாசர்பாடி, மணலி, செங்குன்றம் ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை