உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதுசை எடுத்து பழசு வைத்த செருப்பு திருடனுக்கு வலை

புதுசை எடுத்து பழசு வைத்த செருப்பு திருடனுக்கு வலை

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், அடுக்குமாடி குடியிருப்பின் 19வது தளத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டின் வெளியே அலமாரியில் தன் செருப்பை கழட்டி பாதுகாப்பாக வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.சமீபத்தில், விலை உயர்ந்த செருப்பு ஒன்றை அலமாரியில் பத்திரப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் புதிய செருப்பு மாயமாகி இருந்தது. அதற்கு பதிலாக அறுந்து போன பழைய செருப்பை வைத்து சென்றதாக கூறப்படுகிறது.குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர், லிப்டில் குடியிருப்புக்குள் வந்து, சதீஷ்குமாரின் செருப்பை போட்டுக் கொண்டு, வாலிபர் போட்டிருந்த பழைய செருப்பை கழற்றி விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து சதீஷ்குமார் அளித்த 'ஆன்லைன்' புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி