உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆன்லைன் ரம்மியில் பணமிழந்த தனியார் மேனேஜர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணமிழந்த தனியார் மேனேஜர் தற்கொலை

விருகம்பாக்கம், சாலிகிராமம் தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 51. இவர், தனியார் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்தார்.கடந்த 6ம் தேதி பணிக்கு சென்ற இவர், மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது, தன் மகள் மற்றும் மகனுக்கு, இது என் இறுதி நாள் என குறுந்தகவல் அனுப்பியுள்ளார். உடனே அவரது மகன், அருகில் உள்ளவர்களை வீட்டில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, வீடு திறந்திருந்த நிலையில், மின்விசிறியில் கிருஷ்ணமூர்த்தி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலின்படி வந்த விருகம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி கடந்த மூன்று மாதங்களாக, 'ஆன்லைன் ரம்மி' விளையாடி, 15 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.இதனால் மன அழுத்தத்தில் இருந்த இவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை