உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் விபத்து

லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் விபத்து

திருவொற்றியூர், திருவொற்றியூர் எண்ணுார் விரைவு சாலையில், நேற்று மதியம்,மாநகராட்சி லாரி மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, லாரியின் ஹைட்ராலிக் டியூப் அறுந்ததில், சாலையில், 500 மீட்டர் துாரத்திற்கு ஆயில் கொட்டியது.இதனால், அவ்வழியே டூ - வீரில் சென்ற இருவர், எண்ணெயால் வழக்கி விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின், போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து, எண்ணெய் கொட்டிய சாலையில், மண்ணை அள்ளி போட்டு, சாலையை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை