உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்த அதிரடி நடவடிக்கை

வேளச்சேரியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்த அதிரடி நடவடிக்கை

வேளச்சேரி, சென்னையின் முக்கிய பகுதியாக வேளச்சேரி உள்ளது. மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதுடன், வேளச்சேரி அருகில் ஐ.ஐ.டி., கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலை, டைடல் பார்க் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன. வேளச்சேரியில் குடியிருப்போர் மட்டுமின்றி, பல்வேறு பகுதியினரும் அங்குள்ள வணிக வளாகங்களுக்கு செல்கின்றனர். வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்தில், அடிக்கடி வாகன திருட்டு நடந்தது. ரயில்வே போலீசார், அங்குள்ள திருட்டு, வழிப்பறி புகார்களுக்கு வேளச்சேரி போலீசாரை அணுக அனுப்புகின்றனர். இதனால், குற்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், வேளச்சேரி பகுதியின் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். வேளச்சேரியில் காவல் துறை மற்றும் இதர அரசு துறைகள் சார்பில், 267 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை, வேளச்சேரி காவல் நிலையத்தில் கண்காணிக்கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக, 25 கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இதுபோக, தனியார் சார்பில், 500க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ளன. வேளச்சேரி ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள காவல் உதவி மையத்தை நவீனப்படுத்தி, 24 மணி நேரம் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.போலீசார் கூறியதாவது: அடர்த்தியாக மக்கள் வசிக்கும் மற்றும் வந்து செல்லும் பகுதியாக உள்ளதால், பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளோம். பொது இடங்களில் ஏதேனும் தவறுகள் நடந்தால், காவல் உதவி மையத்தில் உள்ள போலீசாரை அணுகி, உடனடி தீர்வு பெறலாம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை, 24 மணி நேரம் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி