மேலும் செய்திகள்
கம்பராமாயண உபன்யாசம்
01-Aug-2024
ஆதம்பாக்கம், ஆலந்துாரைச் சேர்ந்தவர் நாகூர்மீரான். தென்சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவரை, 2021ல் ஆதம்பாக்கத்தில், எதிர் கோஷ்டியான ராபின் மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசன் உள்ளிட்டோர், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.அதன் தொடர்ச்சியாக, நாகூர்மீரானின் கூட்டாளி ஜெயக்குமார் என்பவர் தலைமையில், ராபின் கூட்டாளி சீனிவாசனை, கடந்த ஆண்டு, 11 பேர் கும்பல் வெட்டிக் கொன்றது.இதையடுத்து, இரு தரப்பினரும் அடிக்க மோதி கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் இருதரப்பிலும் உள்ள முக்கிய குற்றவாளிகளை கண்காணித்து, போலீசார் கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில், நாகூர்மீரான் தரப்பு ஆட்களை கொலை செய்ய, ராபின் தரப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த குறளரசன், 5, என்பவர் திட்டம் தீட்டியது தெரியவந்தது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறளரசனை நேற்று, போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.
01-Aug-2024