உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தவறான சிகிச்சையால் பாதிப்பு? ரூ.1.50 கோடி கேட்டு வழக்கு

தவறான சிகிச்சையால் பாதிப்பு? ரூ.1.50 கோடி கேட்டு வழக்கு

சென்னை:தவறான சிகிச்சையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக, 1.50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் வங்கி பெண் ஊழியர் வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை, வடபழனியைச் சேர்ந்த கஸ்துாரி பிரியா என்பவர் தாக்கல் செய்த மனு:வயிறு வலி காரணமாக, கே.கே.நகரில் உள்ள தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனையான இ.எஸ்.ஐ.,யில் சேர்ந்தேன்.பித்தப்பையில் கல் இருப்பதாக கூறி, அறுவை சிகிச்சை செய்தனர்; பித்தப்பையை அகற்றினர். ஆனால் அதை, என்னிடமோ, கணவரிடமோ காட்டவில்லை. பின், ரத்தப் போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.இ.எஸ்.ஐ., மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால், என் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.என் சொந்த தேவையை கூட, என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை. மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னால் நடக்கவோ, எடையை துாக்கவோ முடியாது; படுக்கையில் உள்ளேன்.எனவே, 1.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும். மருத்துவமனை டாக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, மருத்துவமனை நிர்வாகம், இந்திய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஆக., 19க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி