உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் கடலில் குளித்த ஆட்டோ ஓட்டுனர் பலி

போதையில் கடலில் குளித்த ஆட்டோ ஓட்டுனர் பலி

காசிமேடு,காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் மிதப்பதாக, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் பிரதான சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சத்யநாதன், 42, என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, 10 ஆண்டுகளாக தாய் வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், மதுபோதையில் குளிக்க சென்ற சத்யநாதன் நீரில் மூழ்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ