உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு மேலும் ஒரு அதிகாரி கைது

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு மேலும் ஒரு அதிகாரி கைது

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது கவுஸ், 31. கடந்த டிச., 15ம் தேதி இரவு, சி.டி., ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக, 20 லட்சம் ரூபாயுடன் பைக்கில் அண்ணா சாலை வழியாக சென்றார். அப்போது, திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங், 48, சைதாப்பேட்டை எஸ்.ஐ., சன்னிலாய்டு, 48, ஆகியோர், வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து, 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்தனர்.இது தொடர்பாக, முகமது கவுஸ் கொடுத்த புகாரின்படி, ராஜா சிங், சன்னிலாய்டு, வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42, வணிக வரித்துறை அதிகாரிகளான சுரேஷ், 49, பாபு, 41, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த வணிக வரித்துறை அதிகாரி ஜானகிராமன், நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை