உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமழிசை கூட்டு சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு

திருமழிசை கூட்டு சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க எதிர்பார்ப்பு

பூந்தமல்லி,:பூந்தமல்லி அருகே சென்னை- - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நெடுஞ்சாலை இணையும் திருமழிசை கூட்டுச் சாலை சந்திப்பு உள்ளது. இந்த கூட்டு சாலை சந்திப்பில், அதிக அளவில் கன ரக வாகனங்கள் கடந்து செல்கின்றன. இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, சிக்னல் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், வாகனங்கள் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்குள் நுழைந்து செல்லும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி பூந்தமல்லிக்கும், வலதுபுறம் திரும்பி ஸ்ரீபெரும்புதுார் நோக்கியும் செல்கின்றன. இதே போல், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து வரும் வாகனங்கள் நேர் திசையிலும், இடதுபுறமாக திரும்பி திருவள்ளூர் நெடுஞ்சாலையிலும் நுழைந்து செல்கின்றன. பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் நேர் திசையில் ஸ்ரீபெரும்புதுார் நோக்கியும், வலதுபுறம் திரும்பி, திருவள்ளூர் நெடுஞ்சாலையிலும் செல்கின்றன. இதனால், திருமழிசை கூட்டுசாலை சந்திப்பு, அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக உள்ளது. இங்கு அதிக அளவில் கன ரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. இதனால், இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. மாதந்தோறும், 15 விபத்துகளுக்கு மேல் இங்கு நடக்கிறது. எனவே, இந்த கூட்டுச்சாலை சந்திப்பில் போக்குவரத்து விபத்து மற்றும் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை