உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ் ஓட்டுனரிடம் தகராறு: மூவர் கைது

பஸ் ஓட்டுனரிடம் தகராறு: மூவர் கைது

கே.கே.நகர்:விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 34; அரசு பேருந்து ஓட்டுனர். இவர், நேற்று காலை கேளம்பாக்கம் முதல் கோயம்பேடு வரை செல்லும் அரசு பேருந்தை ஓட்டி சென்றார்.அசோக் நகர் 100 அடி சாலை புத்துார்கட்டு அருகே சென்றபோது, லோடு ஆட்டோவில் வந்த மூன்று பேர், பேருந்தை வழிமறித்து, ஜெயராமனை தாக்கினர்.இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கே.கே.நகர் போலீசார், அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்த மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 22, தமிழ், 19, அஜித்குமார், 21, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி