கார் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தோர் கைது
சென்னை, அண்ணா நகர், வெல்கம் காலனி, 12வது தெருவைச் சேர்ந்தவர் உமாபதி, 35; கார் ஓட்டுனர். கடந்த 27ம் தேதி இரவு, பெரியமேடு அல்லிக்குளம் லிங்க் சாலையில், காரில் அமர்ந்திருந்தார்.அப்போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரிடம் தகாத வார்த்தையால் பேசியது மட்டுமல்லாமல், அவரை தாக்கி மொபைல் போன், 2,700 ரூபாய் பணத்தை கத்தி முனையில் பறித்துச் சென்றனர்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரியமேடு போலீசார், நேற்று சூளையைச் சேர்ந்த ரிச்சேஸ், 25, சங்கர், 26, ஆகிய இருவரை கைது செய்து, கத்தி, மொபைல் போன், 400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.