உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ்காரரிடம் தகராறு போதை நபர்கள் கைது

போலீஸ்காரரிடம் தகராறு போதை நபர்கள் கைது

அண்ணாசதுக்கம், மதுபோதையில், ரோந்து பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தகராறு செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.அண்ணாசதுக்கம் காவல் நிலைய போலீஸ்காரர் கவுதம், நேற்று முன்தினம் இரவு, ரயில்வே பார்டர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது அங்கு, மூவர் மது அருந்தி உள்ளனர். இதைப் பார்த்த கவுதம், அங்கு மது அருந்தக் கூடாது என கண்டித்து, மது பாட்டிலை தட்டி விட்டுள்ளார். இதனால், போதை நபர்கள் தகராறு செய்துள்ளனர். தொடர்ந்து, மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில் அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆசிப் அகமது, 22, ஜான் முகமது, 36, ஜாம்பஜாரைச் சேர்ந்த ராகுல், 22, என தெரிந்தது. மூவரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை