உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிபோதையில் தந்தை தகராறு அடித்து கொன்ற மகன் கைது

குடிபோதையில் தந்தை தகராறு அடித்து கொன்ற மகன் கைது

திருவொற்றியூர், எர்ணாவூர், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வீரய்யா, 65. இவரது மனைவி நாகம்மாள், 60. மகன் ராஜேஷ், 38 உடன் வசிக்கிறார். மூன்று மகள்கள் திருமணமாகி தனியே வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த வீரய்யா, மனைவி நாகம்மாளிடம் தகராறு செய்து, அடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு உள்ளார். இதைப் பார்த்த மகன் ராஜேஷ், ஆத்திரத்தில் அருகிலிருந்த உலக்கையை எடுத்து, வீரய்யா தலையில் அடித்து உள்ளார்.இதில், வீரய்யாவுக்கு பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள், வீரய்யா இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து, எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த, ராஜேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ