உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.டி.சி., ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல் திடீர் மறியலால் குரோம்பேட்டையில் நெரிசல்

எம்.டி.சி., ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல் திடீர் மறியலால் குரோம்பேட்டையில் நெரிசல்

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், காரை உரசியதாக மாநகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பேருந்து ஓட்டுனர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திருவான்மியூரில் இருந்து 'தடம் எண்: 91 வி' என்ற மாநகர பேருந்து, நேற்று மதியம் பயணியருடன் கூடுவாஞ்சேரி நோக்கி சென்றது. பேருந்தை சிட்லப்பாக்கத்தை சேர்ந்த அசோக் குமார், 40 என்பவர் ஓட்டினார். திண்டிவனத்தை சேர்ந்த இருசப்பன், 24, என்பவர் நடத்துனராக பணிபுரிந்தார்.மதியம் 2:30 மணிக்கு, குரோம்பேட்டை வைஷ்ணவா ரயில்வே கேட் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்திற்குள் பேருந்து சென்றது. அப்போது, நிறுத்தத்திற்குள் நின்றிருந்த மகேந்திரா கார் வாகனத்தை எடுக்குமாறு, ஓட்டுனர் ஹாரன் அடித்துள்ளார்.அவர்கள் காரை மாற்றித்தரவில்லை. இதனால், பேருந்து ஓட்டுனர் தடுப்பை ஒட்டிபடி பேருந்தை இயக்கி உள்ளார். அப்போது காரில் உரசி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த காரில் இருந்தவர்கள், பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்ட நடத்துனரையும் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதனால் ஓட்டுனர், பேருந்தை அங்கேயே நிறுத்தினார். ஓட்டுனர் தாக்கப்பட்டதை அறிந்து பின்னால் வந்த 10க்கும் மேற்பட்ட பேருந்துகளும் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த தாம்பரம் உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீசார், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் பேச்சு நடத்தினர். காயமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து, பேருந்துகள் அங்கிருந்து புறப்பட்டன. இச்சம்பவத்தால், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில் நேற்று மதியம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தாக்குதலில் ஈடுபட்டது குரோம்பேட்டையைச் சேர்ந்த, தனியார் சட்டக்கல்லுாரி மாணவி, பிரதீபா ஷாலினி, 25, அவரது கணவர் ரஞ்சித், 26, மற்றும் உறவினர்கள் திலீப், 24, மற்றும் அஷ்வந்த், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை