உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாங்காக் விமானம் 4 மணி நேரம் தாமதம்

பாங்காக் விமானம் 4 மணி நேரம் தாமதம்

சென்னை, சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை 3:35 மணிக்கு புறப்பட தயாரானது. அதில், 235 பயணியர் இருந்தனர்.விமானம், ஓடுபாதையில் ஓட தயாரானபோது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை கண்டறிந்த விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பயணியர், 'லாஞ்ச்' பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். விமானம், காலை 8:00 மணிக்கு புறப்பட்டு செல்லும் என, விமான நிறுவனம் அறிவித்தது. கோளாறு சரிசெய்யும் பணி காலை 7:30 மணிக்கு முடிந்து, விமானம் தயாரானது.நான்கு மணி நேரம் தாமதமாக, காலை 7:53 மணிக்கு சென்னையில் இருந்து பாங்காக்கிற்கு விமானம் புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ