உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒருநாள் கிரிக்கெட்டில் ப்ளூ அவெஞ்சர்ஸ் வெற்றி

ஒருநாள் கிரிக்கெட்டில் ப்ளூ அவெஞ்சர்ஸ் வெற்றி

சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பிரேயர் கோப்பைக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் சென்னையில் துவங்கியது.போட்டிகள், தரமணி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் உள்ள தனியார் விளையாட்டு மைதானங்களில் நடக்கின்றன. நேற்று செங்குன்றத்தில் காலை 9:00 மணிக்கு நடந்த போட்டியில், ப்ளூ அவெஞ்சர்ஸ் - சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 47.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய 'ப்ளூ அவெஞ்சர்ஸ்' அணியின் வீராங்கனையர், கயற் சிற்பிகா, அபர்ணா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அபர்ணா 66 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். கயல் சிற்பிகா, 96 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதனால், 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 168 ரன்கள் எடுத்து ப்ளூ அவெஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தரமணியில் காலை நடந்த மற்றொரு போட்டியில், ரெட் ரேஞ்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில், பர்பிள் பிளேசர்ஸ் அணியை தோற்கடித்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்