உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரி செலுத்துவோரை ஏமாற்றி மோசடி உஷாராக இருக்க வாரியம் அறிவுறுத்தல்

வரி செலுத்துவோரை ஏமாற்றி மோசடி உஷாராக இருக்க வாரியம் அறிவுறுத்தல்

சென்னை,சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, பலரின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணம் திருடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, சமீபத்தில் பலருக்கு மொபைல்போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில் பேசியவர்கள், குடிநீர் வரி பாக்கி உள்ளதாகவும், இன்று கடைசி நாள் என்பதால், அபராதம் இல்லாமல் தவிர்க்க, உடனே பணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளனர். இதை உண்மையென உணர்ந்த பலர், மர்ம நபர்கள் கூறிய 'கூகுள் பே' எண்ணுக்கு பணம் அனுப்பியுள்ளனர். சிலர் சுதாரித்து குறுக்கு விசாரணை செய்த போது, இணைப்பை துண்டித்துள்ளனர். இதுபோன்ற மோசடி, ஒரு வாரமாக நடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கைஉடன் இருக்க வேண்டுமென, குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஒரு வாரமாக, 9223699436, 9094745857, 8148506548 ஆகிய மொபைல்போன் எண்களில் இருந்து, வரி செலுத்த கோரி பலருக்கு அழைப்பு வந்துள்ளது. குறிப்பாக பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் அதிக நபர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதில், சிலர் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர். ஏமாந்தவர்கள், குடிநீர் வாரியம் சார்பில், சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணத்தை காசோலை மற்றும் வரைவோலையாக, பகுதி அலுவலகத்தில் செலுத்தலாம்.சென்னை குடிநீர் வாரிய இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம். வரி பாக்கி தொடர்பாக, எந்த அதிகாரியும் மொபைல்போனில் தொடர்பு கொள்ள மாட்டார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நம்பர் கிடைத்தது எப்படி?

வரி செலுத்துவோரின் மொபைல்போன் எண்கள் உணவு, கூரியர் வினியோகம், ரயில், பேருந்து, சினிமா டிக்கெட் முன்பதிவு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழியாகவோ அல்லது மாநகராட்சி, குடிநீர் வாரிய ஊழியர்கள் வழியாகவோ, மோசடி நபர்களுக்கு கிடைத்திருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, மோசடி நபர்களுக்கு எப்படி விவரம் கிடைத்திருக்கும் என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ