உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

எஸ்பிளனேடு, சென்னை, ஜார்ஜ் டவுனில் செயின்ட் கொலம்பஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாண வியர் பயில்கின்றனர்.இப்பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.இது குறித்து, பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளி முழுதும் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. பீதி ஏற்படுத்தும் நோக்கத்துடன், கடந்த ஓராண்டாக பள்ளிகளுக்கு இ - மெயில் அனுப்பப்படுவது தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை