உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா நகரில் பழுதான எஸ்கலேட்டர்

அண்ணா நகரில் பழுதான எஸ்கலேட்டர்

திருமங்கலம்,அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலம் 100 அடி சாலையில், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கான, இருபாதைகளிலும் 'எஸ்கலேட்டர்' உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள இதை தற்பேது, தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.இந்த சாலையில் எப்போதும், போக்குவரத்து நெரிசல் இருப்பதால், சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் வசதிக்காக எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் எஸ்கலேட்டர் இயக்கப்படும். இதனால், காலையும் மாலை பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் பயனடைந்து வந்தனர்.தற்போது, இந்த எஸ்க்லேட்டர் முறையாக பராமரிப்பின்றி கிடப்பதால், பாழடைந்து கிடக்கிறது. குறிப்பாக, திருமங்கலம் - பாடியை நோக்கி செல்லும் பாதையில் உள்ள எஸ்கலேட்டர் முழுதும் இலைகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, எக்ஸ்லேட்டரை மீண்டும் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ