மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற தம்பதி உட்பட 9 பேருக்கு 'காப்பு'
14-Feb-2025
ஓட்டேரி, ஓட்டேரி, டோபிகானா பகுதியில், கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதாக, ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மது பாட்டில் விற்ற கேப்டன், 36, என்பவரை கைது செய்தனர். இவருக்கு துணையாக இருந்த ஆஷா, 37, என்ற பெண் தலைமறைவானார்.அதேபோல், புளியந்தோப்பில் கஞ்சா விற்ற பரத்குமார், 35, மற்றும் நீலாவதி, 45, ஆகிய இருவரையும், புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள், ஆந்திர மாநிலம் நெல்லுார் சென்று, கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
14-Feb-2025