உலக தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் ரூ.115 கோடியில் ஆறு புதிய திட்ட பணிகள் துவக்கம்
வில்லிவாக்கம், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கத்தில், உலக தரத்தில் கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்தக மையம் உட்பட, 111.58 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். அயனாவரத்தில் நவீன சலவைக்கூடம் உட்பட, 5.22 கோடி ரூபாயில் நிறைவுபெற்ற பணிகளையும் திறந்து வைத்தார்.வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில், 3.93 ஏக்கர் பரப்பளவில், உலக தரத்தில் கொளத்துார் வண்ண மீன்கள் வர்த்த மையம் அமைய உள்ளது. அங்கு, 1 லட்சத்து 25 ஆயிரத்து 402 சதுர அடியில், தரை தளத்தில் 64 கடைகள், அலுவலகம் மற்றும் வாகன நிறுத்தம் அமைகிறது. முதல் தளத்தில் 70 கடைகள், இரண்டாம் தளத்தில் உணவு விடுதி உட்பட, 54 கடைகள், மீன்வள அமைப்புகள் என, மொத்தம் 188 கடைகள் அமைக்கப்படுகின்றன.இதற்காக, 53.50 கோடி ரூபாய் மதிப்பில் துவங்க உள்ள பணிகளுக்கு, மையம் அமைய உள்ள வில்லிவாக்கத்திலேயே, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.அதே இடத்தில், ராயபுரம் மூலகொத்தளத்தில், 0.67 ஏக்கர் பரப்பளவில், 14.31 கோடி ரூபாயில் சமுதாய நலக்கூடம்; புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில், 1.04 ஏக்கரில், 11.43 கோடி மதிப்பில் நவீன சலவைக்கூடத்திற்கான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.தவிர புழல், ரெட்டேரி மற்றும் கொளத்துார் ஏரிக்கரைகளை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் என, மொத்தம் 115.58 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு புதிய திட்ட பணிகளுக்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.அதேபோல் கொளத்துார், நேர்மை நகரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி கமிஷனர் அலுவலகம், கொளத்துார், ஜி.கே.எம்.காலனி.மேலும், ஜம்புலிங்கம் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம், அயனாவரம், சி.கே.சாலையில், 2.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன சலவைக்கூடம் மற்றும் 45 லட்சம் ரூபாய் செலவில் 3 ரேஷன் கடைகள் என, மொத்தம் 5.22 கோடி செலவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., - மா.செ.,
மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின், 116வது பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை வடகிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மாவட்ட செயலர் ராஜேஷ் தலைமையில், புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் தெரு சந்திப்பில் நிகழ்ச்சி நடந்தது.இதில், வடசென்னை வளர்ச்சிக்கான, 1,200 கோடி ரூபாய் திட்டத்தை, முறையாக செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க., அரசு மக்களுக்கு 'அல்வா' கொடுப்பதாகக் கூறி, அதை பிரதிபலிக்கும் வகையில், பொதுமக்களுக்கு,'அல்வா' வழங்கினார்.மேலும், நம் நாளிதழில் வெளியான,'வடசென்னை வளர்ச்சி திட்டம் என்னாச்சு; திருவொற்றியூரில் மதகுகள் அமைக்காவிடில், வெள்ள பாதிப்பு' உள்ளிட்ட தலைப்புகளில் வெளியான செய்திகளை, பொதுமக்களிடம் காண்பித்து பேசினார்.பின், அவர் அளித்த பேட்டியில்,'ஸ்டாலின், தமிழகத்திற்கு முதல்வரா; கொளத்துாருக்கு மட்டுமே முதல்வரா என தெரியவில்லை. அந்த தொகுதியில் மட்டும், 350 கோடி ரூபாய்க்கு திட்டப் பணிகளை துவக்கி வைத்துள்ளார்' என்றார்.
கட்சியினர் ஏமாற்றம்
திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சிக்காக, வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்க உள்ள இடத்திலேயே, வண்ண மீன்கள் அரங்கம் உட்பட பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கூடிய இந்த அரங்கத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசாமல், 15 - 20 நிமிடத்தில் விழா நிறைவடைந்தது. இதனால், கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தத்தளித்த வில்லிவாக்கம்
ஐ.சி.எப்., - வில்லிவாக்கம் செல்லும் நியூ ஆவடி சாலையில், ஏற்கனவே சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று, முதல்வரை வரவேற்க நியூ ஆவடி சாலை, நாதமுனி துவங்கி பாடி மேம்பாலம் வரை, கலை நிகழ்ச்சிகளுக்காக மேடைகள் அமைக்கப்பட்டன. அங்கு கட்சியினரும் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கட்சியினர் ஏமாற்றம்
திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சிக்காக, வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்க உள்ள இடத்திலேயே, வண்ண மீன்கள் அரங்கம் உட்பட பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கூடிய இந்த அரங்கத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசாமல், 15 - 20 நிமிடத்தில் விழா நிறைவடைந்தது. இதனால், கட்சியினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.