உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பசுமை பூங்காவாக மாறும் சோழிங்கநல்லுார் ஏரி

பசுமை பூங்காவாக மாறும் சோழிங்கநல்லுார் ஏரி

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டில் உள்ள ராமன்தாங்கல் ஏரி, 1.20 லட்சம் சதுர மீட்டர் பரப்பு உடையது. இந்த ஏரி, ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்டது. தற்போது, நிலத்தடி நீராதார பகுதியாக விளங்குகிறது.வளர்ச்சி அடைந்து வரும் இப்பகுதியின் தண்ணீர் தேவைக்கா, நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கையில், மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 1.35 கோடி ரூபாயில், 10,000 சதுர மீட்டர் பரப்பில் ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதில், பட்டர்பிளை பார்க், மலர் தோட்டம், மூங்கில் கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதை, இருக்கை, ஒளி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.ஏரியின் மைய பகுதியில், ஒரு திட்டு உள்ளது. அதில், மரம் வளர்த்து, தீவு போன்ற கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது. இப்பணி, இம்மாதம் துவங்க உள்ளது.அடுத்த 10 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இ.சி.ஆரில் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக, இச்சாலையில் அகற்றப்பட்ட மரங்கள் வேரோடு பிடுக்கப்பட்டன.அந்த மரங்களை, ராமன் தாங்கல் ஏரிக்கரையில் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரங்கள், 10 அடிக்கு மேல் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும்போது, இம்மரங்களும் பெரியளவில் வளர்ந்து, பசுமைக்கு கைகொடுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை