உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னைக்கு புது திட்டங்களை அறிவிக்க நிதி ஆதாரங்களை தேடுகிறது சி.எம்.டி.ஏ.,

சென்னைக்கு புது திட்டங்களை அறிவிக்க நிதி ஆதாரங்களை தேடுகிறது சி.எம்.டி.ஏ.,

சென்னை:சென்னை பெருநகர் பகுதிக்கான புதிய திட்டங்களை அறிவிக்க, நிதி ஆதாரங்களை தேடும் நடவடிக்கையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.நகர், ஊரமைப்பு சட்டத்தின் அடிப்படையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குகிறது.

நில வகைப்பாடு

இத்துடன் மனைப்பிரிவு, நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான ஒப்புதலும் வழங்கப்படுகிறது. இத்துடன், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களையும் சி.எம்.டி.ஏ., செயல்படுத்துகிறது.இந்நிலையில், கடந்த நிதியாண்டில், 26 எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளில், 34 கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பிற பணிகளுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

வட சென்னை

இது தவிர, வட சென்னை வளர்ச்சி திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய், பெரும்பாக்கத்தில் சர்வதேச விளையாட்டு நகரம் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.இதில், பெரும்பாலான திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், 2024 - 25 நிதியாண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிப்பதற்கான புதிய திட்டங்களை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சி.எம்.டி.ஏ.,வில் இருப்பில் இருந்த நிதி குறைந்துள்ள நிலையில், புதிய திட்டங்களுக்கு நிதியை தேடும் சூழல் உருவாகிஉள்ளது.

உத்தேச வருவாய்

ஒவ்வொரு ஆண்டும், கட்டுமான திட்ட அனுமதி உள்ளிட்ட இனங்களில் கிடைக்கும் வசூல் தொகை குறித்த விபரங்கள் ஆராயப்படுகின்றன.இதன் அடிப்படையில், உத்தேச வசூல் குறித்த கணக்கெடுப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்த உத்தேச வருவாயை நிதி ஆதாரமாக காட்டி, புதிய திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை