உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தெரு பலகைகள் பொருத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதாக புகார்

தெரு பலகைகள் பொருத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதாக புகார்

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளன. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும், தெரு பெயர் பலகைகள் இன்னும் மாற்றப்படாமலேயே உள்ளன.இரண்டு ஆண்டுகளாக, நகராட்சி, பேரூராட்சி என்றே உள்ளன. இது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தெருக்களில் புதிய பெயர் பலகை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.இதையடுத்து, 5.56 கோடி ரூபாய் செலவில், 2,500 தெருக்களில் புதிய பெயர் பலகை மற்றும் ஏற்கனவே உள்ள பலகைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. ஒன்றாவது மண்டலத்தில், 600 புதிய பெயர் பலகைகள், 500 தெருக்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல் பணியில், 200 - 200 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. 2வது மண்டலத்தில், 400 புதிய பலகை, 400 ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில், 50 சதவீதம் முடிந்துள்ளன.மூன்றாவதில் 500 புதிய பலகை, 400 தெருக்களில் ஒளிரும் ஸ்டிக்கர் பணியில், 125 - 120 முடிந்துள்ளன. நான்காவதில் 600 புதிய பலகை, 600 ஒளிரும் ஸ்டிக்கர் பணியில், 245 - 126; ஐந்தாவதில் 400 புதிய பலகை, 400 ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில், 177 - 60 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன.ஐந்து மண்டலங்களிலும் 50 சதவீத பணிகள் கூட முடியாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விஷயத்தில், மாநகராட்சி கமிஷனர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ