உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதலீட்டில் ரூ.6 லட்சம் ஏமாந்த டாக்டர் வெளிநாட்டு கும்பலுக்கு தொடர்பு

முதலீட்டில் ரூ.6 லட்சம் ஏமாந்த டாக்டர் வெளிநாட்டு கும்பலுக்கு தொடர்பு

மயிலாப்பூர்:மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பிரசாத், 65; மருத்துவர். கடந்த 24ம் தேதி, சென்னை கிழக்கு மண்டல 'சைபர் கிரைம்' பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:என் 'முகநுால்' பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்தது. அதில் வந்த 'லிங்க்கை' தொட்டபோது, ஒரு 'வாட்ஸாப்' குழுவுக்கு சென்றது.அக்குழுவைச் சேர்ந்த ஒருவர், 'நீங்கள் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு அல்லது அதற்கு மேலாக தரப்படும்' என, ஆசை வார்த்தை கூறினார்.அதை நம்பி, முதலில் குறைந்த அளவு பணம் முதலீடு செய்தேன். இரட்டிப்பு பணம் கிடைத்ததால், அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் 6.98 லட்சம் ரூபாய் அனுப்பினேன். இதையடுத்து, அந்த வாட்ஸாப் குழு செயல்படவில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, என் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து விசாரித்த மயிலாப்பூர் போலீசார், பிரசாத் பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் சண்முகம், 32, அவரது கூட்டாளி ஜீவா, 26, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.மோசடிக்கு மூளையாக செயல்பட்டது, வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கும்பல் என தெரிந்தது. அந்த கும்பல், இந்த இருவரது பெயரிலும் கணக்கு துவங்க வைத்து, அதை அவர்கள் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. வெளிநாட்டு மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்