உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளைச்சல் குறைவு பூண்டு விலை அதிகரிப்பு

விளைச்சல் குறைவு பூண்டு விலை அதிகரிப்பு

சென்னை, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா உட்பட பல மாநிலங்களில், பூண்டு அதிகம் சாகுபடியாகிறது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களின் சில இடங்களில், பூண்டு சாகுபடி நடக்கிறது. தமிழகத்தின் தேவைக்காக வட மாநிலங்களில் இருந்தும் பூண்டு அதிகம் வருகிறது.கோயம்பேடு சந்தைக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில், பூண்டு வரத்து இருக்கும். வட மாநிலங்களில், கடந்தாண்டு பூண்டு விளைச்சல் குறைந்ததால், அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்தது.அதிகபட்சமாக 1 கிலோ பூண்டு, 350 ரூபாய்க்கு விற்பனையானது.வட மாநிலங்களில், நடப்பாண்டு ஜனவரியில், பூண்டு அறுவடை துவங்கியதால், விலை படிப்படியாக குறைந்தது. கிலோ பூண்டு 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தற்போது அறுவடை முடிந்துள்ள நிலையில், பூண்டு தேவை அதிகரித்துள்ளது.இதனால், 'ஆன்லைன்' மொத்த வியாபாரிகள் பூண்டு பதுக்கலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பூண்டு விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ முதல்தர பூண்டு 250 ரூபாய்க்கும்; இரண்டாம் ரக பூண்டு 200 ரூபாய்க்கும்; மூன்றாம் தர பூண்டு 170 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை