உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஞ்சிபுரம் தொகுதியில் 9 வேட்பாளர்களின் டிபாசிட் காலி

காஞ்சிபுரம் தொகுதியில் 9 வேட்பாளர்களின் டிபாசிட் காலி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. தி.மு.க., வேட்பாளர் செல்வம், 5,86,044 ஓட்டுகள் பெற்று, அ.தி.மு.க., வேட்பாளரை காட்டிலும், 2,21,473 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 ஓட்டுகள் பெற்றார். பா.ம.க., வேட்பாளர் ஜோதி, 1,64,931 ஓட்டுகள் பெற்று மூன்றாமிடமும், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ்குமார், 1,10,272 ஓட்டுகள் பெற்று நான்காம் இடமும் பெற்றனர்.காஞ்சிபுரம் தொகுதியில், 12,53,582 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. இதில், ஆறில் ஒரு பங்கு ஓட்டுகளை பெற்றால், வேட்பாளரின் 'டிபாசிட்' தொகை திரும்பக்கிடைக்கும். இதன்படி, 2,08,930 ஓட்டுக்கள் பெற்றால் மட்டுமே டிபாசிட் கிடைக்கும் நிலை உருவானது.தேர்தலில் போட்டியிட பொது பிரிவினர் 25,000 ரூபாயும், பட்டியலின வேட்பாளர்கள் 12,500 ரூபாயும் 'டிபாசிட்' தொகை செலுத்துவர். காஞ்சிபுரம் தொகுதி தனி தொகுதி என்பதால் 12,500 ரூபாய் டிபாசிட் தொகை செலுத்தினர்.பிரதான கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என, 11 வேட்பாளர்கள், காஞ்சிபுரம் தொகுதியில் இம்முறை போட்டியிட்டனர். தேர்தல் முடிவில், 11 பேரில், தி.மு.க.,- - அ.தி.மு.க., வேட்பாளர்களை தவிர, ஒன்பது வேட்பாளர்கள் 'டிபாசிட்' இழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ