| ADDED : ஜூன் 25, 2024 12:53 AM
சென்னை, இந்தியாவின் நகை சில்லரை விற்பனையின் பிரம்மாண்ட நிறுவனமாக தனிஷ்க் நிறுவனம் உள்ளது.தனிஷ்க் நிறுவனத்தின், வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஹோட்டலில், கடந்த 21ம் தேதி முதல் 23ம் வரை நடந்தது.இதன் துவக்க விழாவில் பங்கேற்ற வட்டார வணிக பிரிவு தலைவர் நரசிம்மன், வட்டார மேலாளர் தினேஷ் குமார் மற்றும் பகுதி வர்த்தக மேலாளர் தினகர் பாபு ஆகியோர், புதிய டிசைன் நகைகளை அறிமுகப்படுத்தினர். கண்காட்சியில், இடம் பெற்றிருந்த, காலத்தால் மாறாத பாரம்பரியம் நகைகள் முதல் தற்போதுள்ள நவீன வடிவமைப்புகள் வரை பல்வேறு நேர்த்தியான நகைகளை மணப்பெண்கள் மற்றும்நகை ஆர்வலர்கள் பாராட்டினர். கண்காட்சியில், வைர நகைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருந்தது.இவற்றை வாடிக்கையாளர்கள் கண்டுகளித்தனர்; வாங்கி மகிழ்ந்தனர்.