உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விஷ ஊசி செலுத்திமருத்துவர் தற்கொலை

விஷ ஊசி செலுத்திமருத்துவர் தற்கொலை

விஷ ஊசி செலுத்தி மருத்துவர் தற்கொலை சென்னை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த், 29; சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு மாணவர்.மருத்துவமனை விடுதி 7வது பிளாக்கில், அறை எண் 10ல் தங்கியிருந்தார். அவருடன், திருநெல்வேலியைச் சேர்ந்த மாரிமுத்து, 25, என்பவரும் தங்கியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனை உணவகத்தில் சாப்பிட்டு, அரவிந்த் விடுதிக்கு சென்றுவிட்டார். நேற்று காலை 7:45 மணிக்கு, மாரிமுத்து அறைக்கு சென்றபோது, கதவு தாழிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது, அரைஞாண் கயிறை கையில் இறுக்கமாக கட்டி, விஷ ஊசி செலுத்தி அரவிந்த் தற்கொலை செய்தது தெரிந்தது.திருவல்லிக்கேணி போலீசார் உடலை மீட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ