உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுபட்ட 4 இடங்களில் ரூ.2 கோடியில் வடிகால்

விடுபட்ட 4 இடங்களில் ரூ.2 கோடியில் வடிகால்

ராயபுரம்:ராயபுரம் மண்டலத்தில், 2.20 கோடி மதிப்பில், விடுபட்ட நான்கு இடங்களில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன.மழை பாதிப்பை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராயபுரம் மண்டலத்தில், விடுபட்ட நான்கு இடங்களில், மழைநீர் வடிகால் கட்டும் பணி துவங்க உள்ளன.ராயபுரம் மண்டலம், வார்டு 54, சவுகார்பேட்டை, திருப்பள்ளி தெருவில், 50.17 லட்சம் ரூபாய்; வார்டு 54, எல்.பி.கே.ஜி.கார்டன் 3வது தெருவில், 70.65 லட்சம் ரூபாய்; வார்டு 55, போர்ச்சுகீஸ் சர்ச் தெருவில், 49.70 லட்சம் ரூபாய்; வார்டு 55, பேரக்ஸ் 1வது தெருவில், 49.70 லட்சம் ரூபாய் என, நான்கு இடங்களில், 2.20 கோடி ரூபாய் செலவில், புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி