உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை ஊசி இளைஞருக்கு மூச்சு திணறல்

போதை ஊசி இளைஞருக்கு மூச்சு திணறல்

ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி, கஜபதி தெரு, முனுசாமி நகரைச் சேர்ந்தவர் கிஷோர், 24. இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி சுடுகாட்டில், குழி தோண்டும் வேலை செய்து வருகிறார்.குடிப்பழக்கத்திற்கு அடிமையான கிஷோர், நேற்று முன்தினம் இரவு, சுடுகாட்டில் தன் வலது கையில், அவரே போதை ஊசி போட்டுக் கொண்டார். பின், சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆட்டோவில் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை