மது போதையில் பைக் ஓட்டியவர் பலி
ஆவடி, ஆவடி, காமராஜர் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 23. இவர், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் 'யமஹா எம்டி' பைக்கில், திருநின்றவூரைச் சேர்ந்த நண்பர் தீனதயாளன், 22, என்பவருடன் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.கொள்ளுமேடு, சரஸ்வதி நகர் அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த கால்வாயில் விழுந்துள்ளார். இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.தீனதயாளன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.