உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு

திருவொற்றியூர், சூளைமேடு, கந்தப்பன் காலனியைச் சேர்ந்தவர் அன்பு, 60. இவர், நேற்று காலை, விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார்.அப்போது, பித்ரு குண்டுவில் இருந்து சென்னை நோக்கி சென்ற, விரைவு ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியானார்.கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ