உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொறியியல் சேர்க்கை தரவரிசை சாஸ்த்ரா பட்டியல் வெளியீடு

பொறியியல் சேர்க்கை தரவரிசை சாஸ்த்ரா பட்டியல் வெளியீடு

சென்னை:தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை, 2024 --25ம் ஆண்டு, பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, கடந்த 15ம் தேதி வெளிட்டது.அதன்படி 50 சதவீத இடங்களுக்கான ஒதுக்கீட்டில், ஜே.இ.இ., மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தெலுங்கானா, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுகேஷ், தேசிய அளவில் 99.0885 சதவீதம் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார்.இது குறித்து, பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:எந்த நுழைவுத் தேர்வையும் நடத்தாமல், ஜே.இ.இ., மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்களை இணைத்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை சாஸ்த்ரா பல்கலை நடத்துகிறது.தமிழகம், ஆந்திரா, கேரளா உட்பட பல மாநிலங்களில் இருந்து 40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடப்பாண்டு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆகஸ்ட் இரண்டாவது வாரம் முதல் வகுப்புகள் துவங்க உள்ளன.ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சாஸ்த்ராவில் சேரும் மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகை, இலவச உறைவிட மற்றும் தங்கும் வசதி உண்டு.தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை