உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுற்றுச்சூழல் பாதுகாப்பு நுால் வெளியீடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நுால் வெளியீடு

சென்னை, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் நவீன் குமார் மூர்த்தி எழுதிய 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு சட்டங்கள்' குறித்த நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பேசியதாவது:சமீப காலமாக, நீதிமன்ற தீர்ப்புகள் சுற்றுச்சூழலுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்து வருகிறது.ஆறுகள், ஏரிகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களுக்கு சட்ட உரிமை வழங்கி, அவற்றை ஒரு உயிரினமாக கருதி பாதுகாக்க வேண்டும் என, நீதிமன்றங்கள் குறிப்பிடுகின்றன.இது, சுற்றுச்சூழல் நீதி என்ற ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் பேசுகையில்,''இந்த புத்தகத்தில் 11 அத்தியாயங்கள் உள்ளன.''புவி வெப்பமடைதல், பருவமாறுதல் உள்ளிட்ட மாற்றங்கள் குறித்த பிரச்னைகளை நீதிமன்ற அனுகுமுறை உள்ளிட்டவை கோர்வையாக சொல்லியுள்ளனர்,'' என்றனர்.விழாவில், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பார் கவுன்சில் இந்தியா துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழகம், புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை