உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிசையில் தீ பிரிஜ், டிவி நாசம்

குடிசையில் தீ பிரிஜ், டிவி நாசம்

ஆவடி, ஆவடி அடுத்த, புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 55; தனியார் நிறுவன ஊழியர். இரு மகன்களுடன் வசிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, சாந்தி வேலைக்கு சென்ற நிலையில், மகன்கள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது, திடீரென மின்கசிவு ஏற்பட்டு, குடிசையில் தீ பற்றியது. ஆவடி தீயணைப்பு துறையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், குடிசை முழுதும் தீக்கிரையாகி வாஷிங் மிஷின், ப்ரிஜ் மற்றும் 'டிவி' உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், தீயில் நாசமாகின. ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி