ஆவணி க டைசி ஞாயி றில் மீன் பிரியர்கள் ஏமாற்றம்
காசிமேடு:நாளை புரட்டாசி மாதம் துவங்க உள்ளது. புரட்டாசி ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் என்பதால், மக்கள் பலரும் விரதம் கடைப்பிடிப்பர். இதனால், ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேடு துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதலே மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.ஆனால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 50க்கும் உட்பட்ட விசைப்படகுகளே நேற்று கரை திரும்பின. இதனால் மீன் வரத்து குறைவாக இருந்தது. இதனால் விலை அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் ஏமாற்றம்அடைந்தனர். மீனவர்கள் கூறுகையில், 'கடந்த ஒன்றரை மாதங்களாக மீன்வரத்து மிகவும் குறைந்துள்ளது. தொடர் நஷ்டம் காரணமாக, விசைப்படகு உரிமையாளர்கள் படகுகளை தொழிலுக்கு அனுப்ப பயப்படுகின்றனர். 'வழக்கமாக இந்த மாதங்களில் கடம்பா, வவ்வால் உள்ளிட்ட பெரிய மீன்களின் வரத்து அதிகம் இருக்கும். ஆனால், இந்தாண்டு மீன்வளம் வெகுவாக குறைந்துள்ளது' என்றார்.